நடிகர் மோகன் பாபுவை சந்தித்தது குறித்து… மோடி ட்வீட்!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
mohanbabu narendramodi - 2026

நடிகர் மோகன்பாபு வை சந்தித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

திருப்பதியில் உள்ள தம் கல்வி நிலையங்களுக்கு வந்து பார்க்கும்படி பிரதமரை அழைத்ததாக மன்ச்சு மோகன்பாபு தெரிவித்தார்.

உங்களை பிஜேபியில் சேரும்படி மோடி அழைத்தாரா என்று ஊடகங்கள் வினவிய போது அது விஷயம் பற்றி எதுவும் கூறுவதற்கில்லை என்று பதிலளித்தார் மோகன் பாபு.

mohanbabu modi - 2026

மன்ச்சு மோகன் பாபு குடும்பத்தாரோடு நிகழ்ந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்தார். மோகன்பாபு குடும்பத்தாரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவின் முக்கியத்துவம், மக்களோடு கலாச்சாரத் தொடர்புகளை எவ்வாறு வளர்க்க முடியும் போன்ற அம்சங்கள் பற்றி பேசியதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். அதோடு மோகன்பாபு குடும்பத்தாரோடு எடுத்துக்கொண்ட போட்டோவையும் போஸ்ட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து “வாட் எ மேன்!” என்று குறிப்பிட்டு மோகன்பாபு செய்த டிவீட்டை அதோடு இணைத்துள்ளார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.