தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஒருவர் தான் இயக்க வேண்டும் என்று புஷ்கர் காயத்ரி இயக்கக்கூடாது என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளாராம்.
இதனையடுத்து இந்த படத்தின் ரீமேக்கை நீரஜ் பாண்டே இயக்குவார் என தெரிகிறது. விஜய்சேதுபதி வேடத்தில் ஷாருக்கானும், மாதவன் வேடத்தில் மற்றொரு முக்கிய பாலிவுட் நடிகரும் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு ரம்ஜான் அல்லது தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது