ஆரோக்கிய சமையல்: காலிப்ளவர் சப்பாத்தி!

cauliflower - 2026

காலிப்ளவர் சப்பாத்தி (கோபி பரோத்தா)

தேவையான பொருட்கள்:

சிறிய காலிபிளவர் -1
கோதுமை மாவு -2 கப்
சீரகம் -1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் -5
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
கொத்தமல்லி -ஒரு கப்
எலுமிச்சைச்சாறு -1 டீஸ்பூன்

செய்முறை:

kobi paratha - 2026

காலிபிளவரை அலம்பிக் கொண்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் தண்ணீர் விடாமல் திரித்துக் கொள்ளவும். பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். இல்லையென்றால் அதையும் துருவிக் கொள்ளலாம்.

துருவிய காலிபிளவர்,பச்சைமிளகாய்,சீரகம்,உப்பு,மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி விடவும்.

சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசையவும்.

ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பிசைந்த மாவை மூடி வைத்து விடவும். பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக விடவும். திருப்பிப் போட்டு வேக விடவும்.

அடிக்கடி திருப்பிப் போட வேண்டும். பிறகு எண்ணெய் விட்டு 2,3 முறை திருப்பிப் போட்டு விட்டுத் தட்டில் போடவும்.

இன்னொரு முறை:

காலிபிளவரைத் துருவிக் கொண்டு அதனை ஒரு வாணலியில் உப்பு, மஞ்சள் தூள்,கரம் மசாலா,காரப்பொடி சேர்த்து வதக்கி இந்த மசாலாவைச் சப்பாத்தி மாவை இடும் போது உள்ளே வைத்து இட்டாலும் சுவை நன்றாக இருக்கும். ஈரம் இருந்தால் பிழிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் சப்பாத்தி இட வராது.

இதை வதக்காமல் பச்சையாகவும் செய்யலாம், வட இந்தியர்களின் முறையும் அதுவே. காலிபிளவரைத் தண்ணீரின்றிப் பிழிந்து விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் சேர்ந்து சப்பாத்தி மாவினுள் வைத்துச் செய்வர்.

குறிப்புக்கள்:

காலிபிளவரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உப்பு கலந்த சுடுதண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிலுள்ள கிருமிகள் அழிந்து விடும்.பிறகு ஈரம் போகத் துடைக்க வேண்டும்.

சத்து மிகுந்த காலிபிளவர் சப்பாத்தியை சைட் டிஷ் ஏதும் இன்றியே உண்ணலாம். மாவைப் பிசைந்து ஊற வைப்பதால் படு மென்மையாக வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories