ஜெயலலிதாவுக்குப் பிறகு துணிச்சலான நபர் ராஜேந்திர பாலாஜிதான்: சொல்பவர் பேரரசு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
jayalalitha rajendrabalaji - 2026

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! என்று கூறியுள்ளார் இயக்குனர் பேரரசு.

அண்மையில் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குனர் பேரரசு, அவ்வப்போது இந்து உணர்வு பொங்க சில கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருவார். தற்போது, தமிழக அரசியலில் புயலாக வீசிக்கொண்டிருப்பது ராஜேந்திர பாலாஜியின் பேச்சுதான். திமுக., குறித்து அவர் புட்டுப் புட்டு வைத்தவை வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குனர் பேரரசு, இந்துவாய் இருந்துகொண்டு இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதத்தை ஆதரிப்பது சரியாம், ஒரு இந்து ,இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்! நல்ல மதசார்பின்மை!!! என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவு:
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இந்துவாய் இருந்து கொண்டு இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதத்தை ஆதரிப்பது சரியாம், ஒரு இந்து ,இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்! நல்ல மதசார்பின்மை!!!

https://twitter.com/ARASUPERARASU/status/1224408442061721600

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்கள், மு.க.சுடாலின், திமுக.,வினர் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பு இறங்கியுள்ளது. இவர் பால்வளத் துறைக்கு அமைச்சராக இருப்பதை விட அறநிலையத்துறைக்கு அமைச்சராக இருக்கலாம் என்று கூறுகின்றனர் சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.