செய்யுங்க சேமியா புட்டு! காலியாகும் உடனே தட்டு!

Published:

semiya - 2026

கோகனட் – சேமியா புட்டு

தேவையானவை:
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்,
சேமியா – அரை கப்,
சர்க்கரை – 3 டீஸ்பூன்,
கேசரி கலர் – சிறிதளவு,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
பால் – கால் கப் (காய்ச்சி ஆறவைத்தது),
உப்பு – ஒரு சிட்டிகை,
நெய் – சிறிதளவு.

semiya puttu - 2026

செய்முறை:
பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை, கேசரி கலர், ஏலக்காய்த்தூள், சேமியா, உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

புட்டுக் குழாயில் சிறிதளவு நெய் தடவி… சிறிதளவு சேமியா கலவை, தேங்காய்த் துருவல் என மாற்றி மாற்றிப் போடவும். ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் கவிழ்த்து உதிர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: புட்டுக்குழாய் இல்லாதவர்கள் இட்லித்தட்டில் வேகவிட்டு செய்யலாம்.

Related articles

Recent articles

spot_img