ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்: ரஜினி சொன்னதன் ஆதாரம்!

சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sterlite bike theft - 2026

சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தை உருவாக்கினர் என ரஜினி சொன்னது சரியாயிடுச்சு!! பைக் திருடுறவனுக்கு ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்ன வேலை – என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்!

காரணம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த ரஜினியிடம் “யாரு நீங்க” என்று கேட்டு, அதனால் ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெற்ற இளைஞர் இன்று பைக் திருட்டு வழக்கில் கைதாகியிருப்பதுதான்!

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் வெளியிட்ட அறிக்கையில்…

தூத்துக்குடி போராட்டக்காரர்கள் குற்றப்பின்னனி உள்ளவர்கள் உண்மைகள் வெளிவருகிறது! ரஜினியை கிண்டல் செய்தவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ரஜினியை நீங்கள் யார் என கிண்டலடித்த வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதானார். துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் 24. இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. வடபாகம் போலீசார் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மற்றும் கால்டுவெல் காலனி மணி23, ஆசிரியர் காலனி சரவணன் 22, ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்து பைக் கை பறிமுதல் செய்தனர்.

கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். காயமுற்றவர் களிடம் ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், ‘நீங்கள் யார்’ என கிண்டலாக கேட்டவர் … என்று குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.