முரளிதர் இடமாற்றத்தில் ‘ஆபத்தான’ அரசியல்!

Published:

muralidhar - 2026

தீர்ப்பாளர் முரளிதர் இடமாற்றம் குறித்து எதிர் கட்சிகள் உள்நோக்கம் கற்பிக்கின்றன. கண்டனம் தெரிவிக்கின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே.. கொலீஜியம்… தீர்ப்பாளர் முரளிதரின் இடமாற்றம் குறித்த பரிந்துரையை அனுப்பி இருந்தது.அதன் பேரில் அவரது இடமாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்கிறது மத்திய அரசு.

டெல்லி கலவரத்தை விசாரித்த தீர்ப்பாளர் முரளிதரும் ..இதுதான் நான் இந்த நீதிமன்றத்தில் கடைசியாக விசாரிக்கும் அமர்வு என்று கூறி விட்டு தான் விசாரணையை தொடங்கி இருக்கிறார். நிற்க.

டெல்லி கலவரம், உயிரிழப்புகள், சேதங்கள் என்று பதற்றமான சூழலில் ..அதை விசாரிக்க கூடும் நீதிமன்றத்தின் தீர்ப்பாளர்… அனைத்து தரப்பிலிருந்தும் கொடுக்கப்படும் ஆதாரங்களை பார்த்து விட்டு…அதன் பின்னர் தன்னுடைய கருத்துக்களை பொறுமையாக கூறி இருக்க வேண்டும்.

கடைசி அமர்வு என்பதால்..அவ்வளவெல்லாம் பொறுமையாக இருக்க முடியாது. தன்னுடைய கருத்து என்று எதையாவது பரபரப்பாக கூறியே ஆகவேண்டும் என்று நினைத்தால்… அப்போதும் கூட… அனைத்து தரப்பிலிருந்தும் தான் பேச வேண்டும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

ஆனால்…தீர்ப்பாளர் முரளிதரின் பேச்சில் …ஒரு தீர்ப்பாளர் பின்பற்ற வேண்டிய இந்த விதிகள் எதுவும் தென்படவில்லை. தன் முனைப்பு மட்டுமே தென்படுகிறது.

இதற்கு வலு சேர்ப்பவை… IB அதிகாரி அங்கித் ஷர்மாவின் கொடூர கொலை. 400 முறை கத்தியால் குத்தப்பட்டு…6 மணி நேரங்களாக சித்திரவதை செய்யப்பட்டு .. படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறது மருத்துவ உடற்கூறாய்வு அறிக்கை.

கலவரத்தின் கொடூர குற்ற செயல்கள் குறித்து .. ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் ஹுசைன், எம்.எல்.ஏ. அமானுதுல்லா ஆகியோர் மீதான மிக வலுவான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில்..பதற்ற சூழலில் தீர்ப்பாளர் முரளிதரின் பேச்சு வெளிப்படுத்திய ஒற்றை சார்பு அபத்தம் மட்டுமல்ல…மிக ஆபத்தானதும் கூட என்று தெளிவாகவே உணர்த்துகிறது .

முரளிதரின் இடமாற்றலை கண்டித்து கொண்டிருக்கும் கட்சிகளின் ஒற்றை சார்பு அரசியல் & ஆம் ஆத்மீ கட்சி யின் போக்கு போன்றவை எத்தனை ஆபத்தானவை என்பதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  • பானு கோம்ஸ்
ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img