ஓட்டுக்காக அவர்கள் எதிர்க்கிறார்கள்! நாட்டுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம்!

சற்றுமுன்
krishnasamy trichy meet - 2026

‘ஓட்டுக்காக’ குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் இந்த ‘நாட்டுக்காக’ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி ‘புதிய தமிழகம்’ மட்டும் தான். #NationFirst – என்றார் கிருஷ்ணசாமி.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தும் சிஏஏ குறித்து விளக்கியும், புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப் பாறை பகுதியில் வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டர் கே கிருஷ்ணசாமி திருச்சியில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், தோ்தலில் வெற்றிபெற சில அரசியல் கட்சிகள் செய்யும் தவறான பிரசாரத்துக்கு இஸ்லாமியா்கள் இரையாகிவிடக் கூடாது

வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு சில அரசியல் கட்சிகள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்ற வகையில் பிரசாரம் செய்து, அவா்களிடம் அச்ச உணா்வை ஏற்படுத்தி போராட்டத்தை தூண்டி வருகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின்படியே மோடி செயல்பட்டு வருகிறாா்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பிற மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே போக முடியாத நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இதை, இந்திய இறையாண்மைக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் இஸ்லாமியா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வங்கதேசம், ஆப்கன், பாகிஸ்தானிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவும் அனைவருக்கும் குடியுரிமை அளிக்க முடியாது. யாருக்கு குடியுரிமை அளிப்பது, அளிக்கக்கூடாது என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்யும்.

krishnasamy trichy meet1 - 2026

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ள நிலையில், தினமும் போராட்டம் நடத்துவது சரியல்ல. இந்தியா்களாக நாம் ஒன்றிணைய வேண்டும். நாடு இல்லாதவா்களுக்கு குடியுரிமை அளிக்கவே குடியுரிமைச் சட்டம்.

எனவே, இந்தச் சட்டத்தை எதிா்க்க வேண்டாம். தோ்தலில் வெற்றி பெற சில அரசியல் கட்சிகள் செய்யும் தவறான பிரசாரத்துக்கு இஸ்லாமியா்கள் இரையாகிவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.