ஓபிஎஸ்., ஓட்டு போட ஒரு சிக்கல்!

Published:

ops panneerselvam - 2026

தேனி : தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.

17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை முதல் வேலூர் நீங்கலாக தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளிலும் புதுவையின் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திர பழுது காரணமாக சில சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமானது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்க உள்ள பெரியகுளம் வாக்குச்சாவடியிலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வெகுநேரமாக கோளாறைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ் உடனடியாக வாக்களிக்க இயலாமல் போனது.

Related articles

Recent articles

spot_img