அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பல வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக தாமதமேற்பட்டது.
இந்நிலையில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! அதற்காக காலை வந்திருந்த அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி அளிக்க கேள்வி எழுப்பினர்.
ஆனால் அவர் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.




