காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக, 38 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணி வரையிலான வாக்குப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலவரம்…
வாக்குப்பதிவு : 9 மணி நிலவரம்…!
பரமக்குடி – 8.13 %
நீலகிரி – 4%
ராமநாதபுரம் – 11.57%
நாமக்கல் – 7.94%
விருதுநகர் – 5.5%
மதுரை – 3.52%
காஞ்சிபுரம் – 12%
கோவை – 11.20%
பொள்ளாச்சி – 12.20%
பெரம்பூர் – 4.41%
நெல்லை – 2.37%
தேனி – 7.94%
நாகை – 9%




