தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் 7ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் .

தமிழகத்தில் இன்று 3882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 94,000ஐ தாண்டியது. இதுவரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,049ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,533ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர்  எண்ணிக்கை 1,264ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52,926ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இன்று ஒரே நாளில் 31,521 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டன. 

சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 226 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது. அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 147 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டது. 

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் 297 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு: மாவட்ட வாரியாக தகவல்…

corona district wise detail july
corona district wise detail july

Related articles

Recent articles

spot_img