ஆர்ப்பாட்டம் இல்லை; அராஜகம் இல்லை! வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி!

Published:

edappadivote2 - 2026

சேலம் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கைச் செலுத்தினார்.

சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 7.50 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, அமைதியாக, அராஜகம் எதுவும் இல்லாமல் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார்.

votesalem - 2026

தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், தேர்தல் விதிகளைக் காரணம் காட்டி எதுவும் பேசாமல் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இது போல், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்ட கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார்.

நாகை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்துறைப் பூண்டியில் இந்திய. கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வாக்களித்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img