முதலமைச்சர் கேசிஆரோடு சேர்ந்து நாங்களும் சிக்கன் சாப்பிடுகிறோம்! நீங்களும் சாப்பிடுங்கள்!

Published:

chickenmela - 2026

சைனாவில் பிறந்த கரோனா வைரஸ் தொற்றுநோய் உலகையே ஆட்டிப் படைக்கிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுமார் 80 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா வைரசின் வாயில் விழுந்தார்கள். உலகம் முழுவதும் கரேனாவின் தாக்கம் காணப்படுகிறது.

இதன் எஃபெக்ட் கோழிப்பண்ணைகளில் மீது தீவிரமாக விழுந்துள்ளது. சிக்கன், முட்டை தின்றால் கரோனா நோய் வந்துவிடும் என்ற பிரச்சாரத்தால் அவற்றைத் தின்பவர்கள் கூட குறைந்து விட்டார்கள்.

கோழிக்கறியின் பெயரைச் சொன்னாலே ஓட்டம் எடுக்கிறார்கள். கரோனா வைரஸ் பயத்தால் சிக்கன் மார்க்கெட் வலுவிழந்து நிற்கிறது. சிக்கன் சாப்பிட்டால் கரோனா வந்துவிடும் என்ற புகார்கள் கோழிப்பண்ணை தொழில் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரம் படுத்து விட்டதால் கோழிப் பண்ணை விவசாயிகள் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

சிக்கன் சாப்பிட்டால் கரோனா வராது: கோழி, முட்டை தின்றால் கரோனா வருமென்பது பொய் பிரச்சாரம் என்று நேஷனல் எக் கோஆர்டினேஷன் கமிட்டி கூறுகிறது. இதன் மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஹைதராபாத் நெக்லஸ் ரோட்டில் பீப்பிள்ஸ் பிளாசாவில் சிக்கன் எக் மேளா என்ற திருவிழாவை நேஷனல் எக் கோஆர்டினேஷன் கமிட்டி ஏற்பாடு செய்தது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இதில் தெலங்காணா அமைச்சர்கள் கேடிஆர், ஈடல ராஜேந்தர், தலசானி ஸ்ரீநிவாச யாதவ், ஸ்ரீநிவாஸ் கௌட், சினிமா நடிகை ரஷ்மிகா பங்கு கொண்டார்கள். கோழி, முட்டையைத் என்றால் கரோனா வராது என்று அமைச்சர்கள் தெளிவு படுத்தினார்கள்.

சிக்கன் முட்டை வினியோகம் விஷயத்தில் சமூக வலை தளங்களில் வருகின்ற வதந்திகளை நம்ப கூடாது என்றார் கள். சிக்கன் தின்றால் கரோனா வரும் என்ற செய்திகள் அனைத்தும் வெறும் புகார்களே என்று விளக்கினார்கள். எந்த பயமுமின்றி டென்ஷனும் இல்லாமல் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். வைரஸ் உயிரோடு இருப்பதற்கு சான்சே இல்லை:

chickenmela1 - 2026

அப்போது சிக்கன் கறியை ஒரு கை பார்த்த தலைவர்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று அனைவருக்கும் அபயளித்தார்கள். ” எங்கள் வீட்டில் முதலமைச்சர் கேசிஆரோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் சிக்கன் சாப்பிடுகிறோம். நீங்களும் தின்னுங்கள் ” என்று கேசிஆரின் மகனும் அமைச்சருமான கேடிஆர் மக்களிடம் கூறினார்.

பௌல்ட்ரி கேப்பிட்டல் ஆப் இந்தியா – தெலங்காணா என்று கேடிஆர் கூறினார். தெலங்காணாவில் சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கோழிப்பண்ணை துணையாக இருக்கிறது என்று நினைவுபடுத்தினார். இவற்றில் இருக்கும் போஷக மதிப்புகள் வேறு எதிலுமே இல்லை என்று தெளிவாக கூறினார். குறைந்த விலைக்கு சத்தான ஆகாரம் கிடைக்கிறது என்றார் கேடிஆர். சிக்கன் மூலம் எந்த ஒரு சுகாதார பிரச்சினையும் வராது என்று அறிவித்தார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

சிக்கனுக்கும் கெரோனா வைரசுக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவாக கூறினார். சிக்கன் மீது தீய பிரச்சாரங்கள், பொய் வதந்திகள் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். முட்டை, சிக்கன், மட்டன், பிஷ் இவற்றுக்கு கரோனா இல்லை என்றும் நாம் சமைக்கும் விதத்தில் அப்படிப்பட்ட வைரஸ் உயிரோடிருக்கும் சான்சே இல்லை என்றும் தெரிவித்தார்.

சிக்கனுக்கும் கரோனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் இராஜேந்திர் கூறினார். சிக்கன் தின்றால் கரோனா வரும் என்பதில் உண்மை இல்லை என்றார். நாம் அனைவரும் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் . சிக்கன் சாப்பிட்டால் நோய் வரும் என்ற வதந்தியால் 500 கோடி ரூபாய் கோழிப்பண்ணை நஷ்டத்தை அடைந்துள்ளன என்று தெரிவித்தார். படித்தவர்கள் கூட வதந்திகளை நம்புவது வருத்தத்துக்குரியது என்று அமைச்சர் சீனிவாஸ் தெரிவித்தார். லட்சம் பேர் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதை நினைவுபடுத்தினார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img