திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
thiruchendur kodiyetram - 2026

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழா மாசி திருவிழா. இது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை 5.20 மணிக்கு கோவில் உள்பிராகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் வீரபாகு பட்டர் கொடியேற்றினார். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்ற தரிசனத்தையும் முருகப் பெருமானையும் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா நாட்களில் கோவில் வளாகத்தில்உள்ள கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கத்தில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், பரதநாட்டியம், திருப்புகழ் வீணைஇன்னிசை, திருப்புகழ்நடனம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

10-ஆம் நாளான வருகிற 8-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் மாசி பெருந்திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்

ஶ்ரீ விஹாரி வருடம் மாசி மாதம் 17ம் தேதி (29/02/2020) சனிக்கிழமை: காலை 10:30 மணிக்கு மேல்
சுவாமி ஶ்ரீ குமரவிடங்கர் சிம்ம கேடய சப்பரத்திலும், அருள்மிகு ஶ்ரீ தெய்வயானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி அருள்மிகு ஶ்ரீ தூண்டுகை விநாயகர் திருக்கோவிலுக்கு வடக்கு புறமுள்ள ஆழ்வார் திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபம் சேர்தல். அம்பாள் மட்டும் எட்டு திருவீதிகளில் உலா வந்து மேற்படி மண்டபம் சேர்தல்.

மாலை 07:00 மணிக்கு மேல்: ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திலிருந்து சுவாமி ஶ்ரீ குமரவிடங்கர் சிம்ம கேடய சப்பரத்திலும் ஶ்ரீ தெய்வயானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு திருவீதிகளில் உலா வந்து மேலக்கோவில் வந்து சேர்தல்.

கலை நிகழ்ச்சிகள்:
இடம்: சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை அரங்கம்

காலை 10:00 மணி: திருநெல்வேலி லெட்சுமி சுந்தரராஜன் குழுவினரின் “திருப்புகழ் இன்னிசை”
உபயதாரர்: திருப்புகழ் மாதர் குழு, திருநெல்வேலி.

காலை 11:00 மணி: திருநெல்வேலி கவிஞர் பொன் வேலுமயில் அவர்களின் “முருக தரிசனம்” என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு.
உபயதாரர்: வே.நா.ரா.ராஜ் − ரா.லெட்சுமி தம்பதியினர்,
தோட்டப்பாளையம், வேலூர்.

மதியம் 12:00 மணி: திருச்செந்தூர் வீரராகவன் அவர்களின் “அருணகிரிநாத சுவாமிகள்” என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு.
உபயதாரர்: ஆதி குருசாமி நாடார், குரு ஸ்டோர், ஆறுமுகநேரி

மதியம் 01:00 மணி: திருப்பூர் செல்வி த.சண்முகபாக்கியவதி குழுவினரின் “பக்தி இன்னிசை”
உபயதாரர்: சிவமுருகன் திருமண மண்டபம், சிவமுருகன் தங்கும் விடுதி, சிவமுருகன் மினி தங்கும் விடுதி
திருச்செந்தூர், சிவமுருகன் உணவகம், கன்னியாகுமரி.

மாலை 05:00 மணி: தூத்துக்குடி முத்ரா நடன பள்ளி மாணவிகளின் “பரத நாட்டியம்”
உபயதாரர்: கோ.பாலசுப்ரமணியம்,
ஜெமினி பொதுச்சேவை மையம்,
திருச்செந்தூர்.

மாலை 07:00 மணி: திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் குழுவினரின் “பக்தி இன்னிசை”
உபயதாரர்: ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் கிளை, திருச்செந்தூர்.
ஶ்ரீ வாஞ்சி வேத வித்யாலயா, திருச்செந்தூர்.

இரவு 09:00 மணி: வள்ளியூர் சு.இராசுக்குட்டி, இரா.சங்கர் குழுவினரின் “நாதஸ்வர இன்னிசை”
உபயதாரர்: பெ.ஆறுமுக நாடார் , சுப்ரமணியபுரம், திருச்செந்தூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.