காங்கிரஸ்காரர்கள் புத்தியே கழிசடை புத்திதானா! கடவுளே… இப்படியா சாக்கடை ஆகணும்?!

Published:

congress leader sushmita dev - 2026

காங்கிரஸ்காரர்கள் ஏன் தான் இப்படி எல்லோருமே கழிசடையாக மாறிவிட்டார்களோ என்று எண்ணும்வகையில் சாக்கடைத்தனமான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சுஷ்மிதா தேவ் எனும் காங்கிரஸ்காரர்.

பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஒரு நாள் தனது சமூக ஊடக கணக்குகளை ஒரு பெண்ணிடமே ஒப்படைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதுவும் மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி அன்று! இதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் செவ்வாய்க்கிழமை அவருக்கு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், உங்களது டிவிட்டர் கணக்கின் கட்டுப்பாட்டை உன்னாவோ பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரிடம் வழங்க வேண்டும். அவளே தனது கதையைச் சொல்லத் தகுதியானவர் “. என்று குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் மகளிர் பிரிவுத் தலைவரான சுஷ்மிதா தேவ், இவ்வாறு தெரிவித்திருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தனது சமூக ஊடகக் கணக்கை பெண்களிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியானது, “பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அவரது மோசமான பிம்பத்தை சரிசெய்ய ஒரு வெற்று முயற்சி மற்றும்மேலோட்டமான முயற்சி என்று குறிப்பிட்டிருந்தார் சுஷ்மிதா தேவ். இத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் மேலும் குறிப்பிட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

உங்கள் கட்சி தலைவரின் பலகட்ட தாக்குதலில் இருந்து தப்பித்துள்ள உன்னாவ் பலத்கார பெண்ணிடம் உங்கள் கணக்கை ஒப்படையுங்கள், அவர் தனது கதைகளை அதில் தெரிவிக்கட்டும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக, திங்கள் கிழமை அன்று, பிரதமர் தனது டிவிட்டர் சமூக ஊடகக் கணக்கினை ஒரு பெண்ணிடம் கொடுப்பதாகவும், பெண்கள் தங்களை உத்வேகம் பெறச் செய்த அனுபவங்களை அதில்பகிர்ந்து, நாட்டு மக்களுக்கு பெண்களின் பெருமையை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி, ஒரு ஹேஷ்டேக்கினையும் பதிவிட்டார்.

மார்ச் 8, மகளிர் தினமான அன்று, “எவருடைய வாழ்க்கையும் சேவையும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது” என்று, சோஷியல் மீடியாவில், ஊக்கமளிக்கும் பெண்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்த அழைப்பு, நாட்டில் உள்ள சாதனைப் பெண்களை பெரிதும் வெளிச்சமிட்டுக் காட்டும் என்று நம்பலாம்.

Related articles

Recent articles

spot_img