மார்ச் 23 வரை அரசு எதுவுமே செய்யாம சும்மா இருந்துட்டு திடீர்னு லாக் டவுன் பண்ணிட்டாங்கனு பைத்தியக்காரத் தனமா உளறி மோடி மீதுள்ள வெறுப்பில் விசத்தை கக்கும் சிலருக்கு, இந்திய அரசு இதுவரை எடுத்த முக்கிய நடவடிக்கைகள் பற்றிய விவரம்…
நவம்பர் மாதமே கொரானா பரவ ஆரம்பித்தும், ஜனவரி 7 தான் சீனா முதன் முதலா அதை பத்தி வெளியே அதிகாரப் பூர்வமா சொல்லுது… உலக நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமா நோயின் தன்மை பற்றி தகவல் தர வேண்டிய WHO ஜனவரி 14 ல இது மனிதர் டூ மனிதர் பரவாதுனு சீனா சொன்ன பச்சை பொய்ய அப்படியே அறிவித்தது! பல நாடுகள் அசால்ட்டா இருந்து மாட்டிகிட்டது இதனால் தான்…
ஜனவரி 7 சீனா கொரானா பற்றிய தகவல் சொன்னதும், ஜனவரி 8 அன்றே இந்தியா இதை பற்றி ஆராய வல்லுநர் குழு மீட்டிங் நடத்துச்சு! வல்லுநர்னா அந்த துறை சார்ந்த படித்த அனுபவம் வாய்ந்தவர்கள்.. சினிமா கூத்தாடிகள், முட்டுச் சந்து போராளிகள்லாம் அங்க இருக்க மாட்டானுக…
ஜனவரி 17, சீனப் பயணிகள் மீது முழு சோதனைக்கு உத்தரவிடப்படுகிறது. ஜனவரி 25, பிரதமரின் முதன்மை செயலர் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துறார்.
ஜனவரி 29, N95 மாஸ்க், PPE போன்ற மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுது, உற்பத்தியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுது..
ஜனவரி 30, இந்தியாவின் முதல் கொரானா பாசிட்டிவ் அடையாளம் காணப்படுது, உடனே 6 லேப், 6 குவாரன்டைன் சென்டர் உருவாக்கப்படுது.
பிப்ரவரி 1 ந் தேதி உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணி தொடங்குது…
பிப்ரவரி 3 சீனாவுக்கு இ-விசா தடை செய்யப்படுது, வெளிநாடு செல்லும் நபர்களுக்கு டிராவல் அட்வைஸ் வழங்கப்படுது.
பிப்ரவரி 7 இந்தியால வெறும் 3 கேஸ் தான், ஆனா 1,39,539 பயணிகளுக்கு ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. பிப்ரவரி 22,24, 29 தேதிகளில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுது…
மார்ச் 3 இந்தியா ல வெறும் 6 கேஸ் தான், யுனிவர்சல் ஸ்கிரீனிங் நடைமுறைக்கு வருது. மார்ச் 4 பிரதமர் ஹோலி போன்ற கொண்டாட்டங்களை தவிர்க்க சொல்றார். மார்ச் 7 பிரதமர் ரிவியூ மீட்டிங் நடத்துறார், புதிய கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படுது…
மார்ச் 11 ல தான் கொரானா pandemic diesease னே WHO அறிவிப்பு செய்யுது, அதுக்கு முன்னாடியே எப்படி லாக் டவுன் அறிவிக்க முடியும், உடனே மார்ச் 12 ந் தேதியே பிரதமர் நிலைமையின் தீவிரத்தை மாநிலங்களுக்கு சொல்றார், பெரும்பாலான விமான போக்குவரத்து ஏப்ரல் 15 வரை தடை செய்யப்படுது…
மார்ச் 14, 56 லேப் ரெடி ஆயிருச்சு, சோதனை கருவி, தடுப்பு மருந்து உருவாக்க ஆராய்ச்சியாளர்களிடம் அறிவுறுத்தப் படுது. மார்ச் 18, 175 கேஸ் இருக்கும் போதே கட்டாய சமூக விலகல் நடைமுறைக்கு வருது. கல்வி நிறுவனங்கள் மூடப்படுது, மார்ச் 19 பிரதமர் ஜனதா கர்பியூ க்கு வேண்டுகோள் வைக்குறார். பொருளாதார நிலைமையை சமாளிக்க பொருளாதார செயற்குழு ஏற்படுத்தப்படுது…
மார்ச் 21 நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் லாக் டவுன் செய்யப்படுது. மார்ச் 22 , ஜனதா கர்பியூ, கொரானா கேஸ் 500 இருக்கும் போதே, மார்ச் 23, உள்நாட்டு விமான, ரயில் போக்குவரத்து தடை செய்யப்படுது. மார்ச் 24 பிரதமர் மோடி பொருளாதாரத்தை விட நாட்டு மக்கள் உயிர் தான் முக்கியம் னு வளர்ந்த நாடுகளே செய்ய பயந்த விசயமான நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுனை அமல்படுத்துறார்…
மார்ச் 25 வென்டிலேட்டர், சானிடைசர், முக்கிய மருந்துகளின் ஏற்றுமதி தடை செய்யப்படுது. சில அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் நிலையமா மாற்றப்படுது.
மார்ச் 26 நிதி அமைச்சர் ஏழைகளுக்கு உதவ 1.76 இலட்சம் கோடி கரீப் கல்யாண் திட்டத்தை செயல்படுத்துறாங்க, மார்ச் 27 RBI தொழிற்துறைக்கு நிவாரண திட்டங்களை அறிவிக்குது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாநில SDRF நிதியை பயன்படுத்த சொல்றாங்க…
பிரதமர் அலுவலகம் முதல் விஏஓ அலுவலகம் வரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்ல இருந்து இரண்டாம் நிலை காவலர் வரை, மத்திய சுகாதார செயலர் ல இருந்து அங்கன்வாடி பணியாளர்கள் வரை இரவு, பகலா போராடுறாங்க, ரயில்வே ரயில் பெட்டிகளை மருத்துவனையா மாற்றம் செய்றாங்க, இவனுக இது எதுவும் தெரியாம நோகாம குறை சொல்றானுக.
இந்தியா 130 கோடி மக்கள் உள்ள நாடு, உத்திர பிரதேசம் மக்கள் தொகை மட்டும் 23 கோடி, சீனா, இந்தியா, அமெரிக்காக்கு அடுத்து மக்கள் தொகையில் 4 வது பெரிய நாடா இருக்க வேண்டியது நம்ம நாட்டின் ஒரு மாநிலமா இருக்கு…
சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 60 இலட்சம், சென்னைய விட கம்மி, அவனே லாக் டவுனுக்கு பயப்படுறான், இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன்,கனடா, நெதர்லாந்து, பிரிட்டன் னு நம்ம தமிழ்நாட்டு அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடுகள் எல்லாம் நிலைமைய சமாளிக்க திணறும் போது, நாம மிகக் சிறப்பா தான் செயல்படுறோம்…
டெல்லி தப்லீக் கேஸ்கள் மட்டும் இல்லனா, தமிழ்நாட்டுல கொரானா பாதிப்பு 50 க்கும் குறைவு, இந்தியா முழுவதும் பெருமளவு எண்ணிக்கை குறைந்து இருக்கும், அதை பத்தி போராளிகள் பேச மாட்டானுக…
இப்போ வரை தினமும் பிரதமர் பல துறை வல்லுநர்களுடன், எதிர் கட்சியினருடன் ஆலோசனை நடத்துறார், உலகத் தலைவரா சார்க், G 20 நாடுகளை கொரானாவிற்கு எதிரான நடவடிக்கையில் முழு வீச்சில் ஒருங்கிணைக்கிறார்…
உலகம் முழுவதும் இந்தியாவின் நடவடிக்கையை பாராட்டு கிறார்கள், உலக வல்லரசு அமெரிக்கா, ஐரோப்பியாவில் இருக்கும் வளர்ந்த நாடுகளே இந்தியாவிடம் மருந்து பொருட்கள் உதவிகள் கேட்டு கெஞ்சிகிட்டு இருக்கு…
இந்த போராட்டத்துல அரசுக்கு தோளோடு தோள் நின்று உதவி செய்யறவங்க எல்லாம் சும்மா இருக்காங்க, நாட்டுக்கு ஒரு நயா பைசாக்கு பிரஜோயனம் இல்லாதவனுக நாட்டை குறை சொல்லிட்டு இருக்கானுக.