சென்னையில் இன்று 567 பேருக்கு பாதிப்பு! தலைமைச் செயலக ஊழியர் இருவருக்கு கொரோனா?

Published:

tamilnaducorona
tamilnaducorona

சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 79 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக பொதுக் கணக்குப் பிரிவில் இருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவலால் தலைமைச் செயலக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 400-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 6,282-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் இன்று உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94ஆக உயர்வு

covid 19 may 21
  • சிவகங்கை, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக பாதிப்பில்லை
  • வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகிறது
  • வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் புதிதாக 13 பேருக்கு இன்று கொரோனா உறுதி
  • 4 ரயில்களில் 3891 பேர் வந்துள்ள நிலையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
  • கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6282ஆக உயர்வு
  • விமானப்படை விமானம் மூலமாக வந்தவர்களில் இதுவரை 23 பேருக்கு கொரோனா உறுதி
  • மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் இன்று 76 பேருக்கு
  • கொரோனா உறுதி
  • சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது
  • தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ நெருங்கியுள்ளது
  • தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ஆக உயர்வு
ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img