தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா!

சற்றுமுன் தமிழகம்
china coronavirus
china coronavirus

தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மே 29-ல் 874 பேருக்கும், மே 30-ல் 938 பேருக்கும், மே 31-ல் 1149 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று 13 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,706 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்… என்று சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

Media Bulletin COVID PM Page
Media Bulletin COVID PM Page

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.