தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவு!

Published:

coronaward
coronaward
  • தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,018;
  • உயிரிழப்பு 528 ஆக உயர்வு
  • இன்று தமிழகத்தில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்
  • தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது… தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர் இதையடுத்து ஒரேநாளில் உச்சபட்ச உயிரிழப்பு இன்றைய தேதியில் பதிவாகியுள்ளது 

தமிழகத்தில்  இன்று 1515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது@ தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,019ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 48,000ஐ கடந்துள்ளது 

தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 1438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
covidjuna
covidjuna

சென்னையில் அதிகபட்சமாக 919 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் பதிவாகியுள்ளது.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 64 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் கன்னியாகுமரியில் மூன்று பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Related articles

Recent articles

spot_img