உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா! கலக்கத்தில் தலைமைச் செயலகம்!

Published:

anbazhagan
anbazhagan

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், முதல்வர் அலுவலகத்தில், ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னையில்   கரோனா பரவல் அதிகரித்து வருகிறது இந்த வைரஸ் தொற்றினால் காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அரசியல் பிரமுகர்களும், அடுத்தடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் நலமுடன்  இருப்பதாகவும், சளி பிரச்னை மட்டுமே உள்ளது, கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர் சார்ந்த தரப்பினர் கூறி வருகின்றனர்.  

அமைச்சர்களின் உதவியாளர், பாதுகாவலர், ஓட்டுநர்கள்  என பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அமைச்சர்களிடம், தலைமைச் செயலக ஊழியர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தலைமைச் செயலகத்தில், முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கொரானா தாக்கத்தால் உயிரிழந்தது அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் பல்வேறு ஊழியர்களுக்கும் தொடர்பான குறித்த பரிசோதனைகள் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இதில், ஐந்து ஓட்டுநர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானதாக, தகவல் வெளியானது. நேற்று பணிக்கு வந்த 45 ஊழியர்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை முடிவுகள் இன்று தெரிய வரும். 

இந்நிலையில் இன்று காலை தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்வெளியானது. முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img