சென்னையில் இன்று 22 பேர் உயிரிழப்பு; ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை என முதல்வர் எச்சரிக்கை!

Published:

edappadi pazhanisaamy
edappadi pazhanisaamy

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ரயில்வே மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.ஓமந்தூரார் மருத்துவமனையில் இருவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ,அம் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்துள்ளது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை நகரைப் பொறுத்தவரை வெகு சிலரைத் தவிர பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியத் தொடங்கி விட்டனர். இருப்பினும், மதுரை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது தொடர்கதையாகவே உள்ளது. மதுரை புறநகர் போலீஸாரும், பேரூராட்சிகள் துறையும் மாஸ்க் அணியாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,71,325 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  4,87,142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6,20,894 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் ரூ. 13,84,13,810 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருநூறு படுக்கைகள்  சென்னை குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு  சனிக்கிழமை செய்தார். குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் , 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வும், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக பரவலை பின்பற்ற வேண்டும் என்றார் முதல்வர் பழனிச்சாமி.

  • ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img