கொரோனா : காவல் துறையில் இரண்டாவது உயிரிழப்பு!

Published:

tamilnadu police
tamilnadu police

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளது காவல் துறையினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த களப் பணியாளர்களாக முன்னணியில் நிற்கும் காவலர்கள் பலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

ஏற்கெனவே சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்த நிலையில், இது இரண்டாவது உயிரிழப்பு என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன் காவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img