கொரோனா பீதி: மாரடைப்பால் மரணம்! சடலம் ஊருக்குள் வர மக்கள் எதிர்ப்பு!

Published:

ambulance

மாரடைப்பால் இறந்தவரின் உடலை, கொரோனா அச்சத்தால் ஊருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சின்ன கீசகுப்பத்தை சேர்ந்த பெண் வேண்டாமணி, 51. இவர் மகன் ஜனார்த்தனன், 31, ரயில்வே ஊழியர். கடந்த வாரம், வேண்டாமணி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் மகன் ஜனார்த்தனனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். இறந்தவருக்கு கொரோனா இல்லை என, சான்று அளிக்கப்பட்டது.

கொரோனா அச்சத்தால், சின்ன கீசகுப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, உடலை கொண்டு வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் ஏற்கவில்லை.

இதனால் மருத்துவமனையிலிந்து, நேரடியாக சின்ன கீசகுப்பம் மயானத்திற்கு, நேற்று அதிகாலை அவர் உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img