கார்த்திக் சிதம்பரம் பயப்படுகிறார்….!
அப்பன் ப.சிதம்பரத்துடன் பல ஊழல்களில் பங்கு வகித்த கார்த்திக்
சிதம்பரத்திற்கு மிக நன்றாகத் தெரியும் தன்னை விசாரிக்கப் போகும் சிபிஐயும்,
அமலாக்கப் பிரிவும் எப்படியெல்லாம் விசாரணையை நடத்துவார்களென்று….!
இப்போது நமக்கும் தெரிந்துவிட்டது உள்துறையின் டைரக்டர் R.V.S மணியை, சாத்வி
ப்ரக்யாவை, கர்னல் ப்ரோஹித்தை இதே விசாரணைக்கு குழு எப்படி நடத்தினார்கள்
என்று. அத்துடன் அப்போது சிதம்பரம்தான் உள்துறை அமைச்சராக இருந்து இந்த
விசாரணைகளை இந்த அளவிற்கு குரூரமாக நடத்தக் காரணமாக இருந்தது.
இப்போது புரிகிறதா ஏன் கார்த்திக் சிதம்பரம் இந்த விசாரணைகளுக்கு ஆட்படாமல்
தப்பித்து ஓட முயற்சி செய்தார் என்று…? ப.சிக்கும் பயத்தில் அஸ்தியே கலங்கி
இருக்கிறது. தான் செய்யச் சொன்ன அத்தனை சித்திரவதைகளும் மகனுக்கும்
நடந்தேறினால் என்ன ஆகும் என்று புரிந்ததால் மட்டுமே விழி பிதுங்கி
இருக்கிறார்.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் ப.சிதம்பரம் ஆடாத ஆட்டமா….? தேர்ந்தெடுத்த சிபிஐ
ஆட்களின் துணை கொண்டு இவர் குறி வைத்தது அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர
மோடியை. அதற்குத் துணை போனது ஊடக விபச்சாரி ND TV மற்றும் தெஹல்கா நிறுவனம்.
அந்நாளைய சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மற்றும் ஸ்பெஷல் டைரக்டர் சலீம் அலி
இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு R.V.S.மணியை (IB) உளவுத்துறை இயக்குனர்
ராஜேந்திர குமார், மற்றும் சிலரின் மேல் பழியைப் போடும்படி, அவர்கள் பெயரைச்
சொல்லுமாறு பல விதங்களிலும் கட்டாய படுத்தப்பட்டு கொடுமைப்
படுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் இந்தக் கதைகள் ஒவ்வொன்றாக வெளியே வரத்
தொடங்கியுள்ளது.
திரு R.V.S.மணியை மூன்றாம் தர சினிமாவில் வருவதுபோல கால் கைகளைக் கட்டி தகாத
இடங்களில் சிகரெட்டால் சுடுவோம் என்று பயமுறுத்தியுள்ளனர்.
அதே போல சாத்வி பிரக்யா தன்னை மும்பையின் ATS குழு (Anti – Terrorism Squad)
எந்த அளவு சித்ரவதை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பாடாய்ப் படுத்தியதாகவும்
அத்தனையையும் மேற்பார்வையிட்டவர் இதே ப.சிதம்பரம் என்றும் டிவி சானல்களில்
கூறியுள்ளார்.
தற்போது நேற்று பெயிலில் வெளிவந்துள்ள ப்ரோஹித் அவர்களின் மனைவி நேற்றைய
செய்தியில் தன் கணவன் கடந்த 9 ஆண்டுகளாகக் கொடுமைப்பட்ட நிகழ்வுகளை கண்ணீர்
சிந்தி விளக்கியுள்ளார். இத்தனைக்கும் இந்தப் ப்ரோஹித் ராணுவத்தில் கர்னலாகப்
பணியாற்றியவர்.
தற்போது ப.சிதம்பரத்திற்கு கொடுத்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் காலம்
வந்துவிட்டது என்று தோன்றுகிறது. முதலில் இந்த மரியாதைகளை இவர் மகனுக்கு
அளித்துவிட்டு அடுத்த முறைவாசல் இவருக்குத்தான்.
இன்று இதற்கான ஆட்டம் ஆரம்பம்….!




