
ஆவலுடன் எதிர்பார்த்த ரிலையன்ஸ் 4ஜி மொபைல் முன்பதிவு இன்று தொடக்கம்
முன்பதிவு செய்வது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைலுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மொபைலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் முன்பதிவு செய்யலாம்.
*ஆன்லைன்*
இணையதளத்தில் இந்த 4ஜி மொபைலை முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உண்டு. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ www.jio.com.jiophone/ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம், அல்லது மற்றொரு வழியான My jio மொபைல் அப்ளிகேசன் வழியாகவும் இந்த இணைய பக்கத்தை அனுகலாம்.
*ஆஃப்லைன்*
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலமாகவும் இந்த இலவச ஜியோ 4ஜி மொபைலை புக் செய்து கொள்ளலாம்.
இலவச ஜியோ 4ஜி மொபைலை முன்பதிவு செய்வதற்கு 500 ரூபாயை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகை வைப்புத் தொகையான 1,500 ரூபாயில் கழித்துக்கொள்ளப்படும். மொபைலை டெலிவரி பெறுகையில் மீதத் தொகையான 1,000 ரூபாயை செலுத்த வேண்டும்.
*153 ரூபாய் – அளவில்லா கால்கள், மெசேஜிங் & டேட்டா*
ஜியோ 4ஜி மொபைலில் ஜியோ தன் தனா ஆஃபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு, 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.



