இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்”: ஓபிஎஸ்!

Published:

05 July17 OPS

அயோத்தி வரலாற்றில் இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. ராம பக்தர்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறப்போகிறது. பல ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இந்த கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெறுகிறது.

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம்

ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில் இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்” கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img