ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு! நாளை எவை எல்லாம் செயல்படும்?

சற்றுமுன் தமிழகம்
144

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆகஸ்ட் 31-ம்ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் கடைகளுக்குத் தடை: முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும்.

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம் போல செயல்படும். பால் கடைகளுக்கு காலை நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.