நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கும் இரு மாணவர்கள் ப்ளூவேல் என்னும் நீலத்திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் கையைக் கீறி திமிங்கலம் படம் வரைந்து இருந்ததைப் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடம் தெரிவித்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு யகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், மாணவர்களின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, செல்போனில் ப்ளூவேல் விளையாட்டை டவுன்லோடு செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு பிடித்தனர்.
இரு மாணவர்களுக்கும்மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.


