14 அம்ச கோரிக்கை… டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடல்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
tasmac-shops
tasmac-shops

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடல்

டாஸ்மாக் கடைகளில் விற்பனையான பணத்தை ஊழியர்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

கேரளா மதுக்கடை நிர்வாக முறைமை டாஸ்மாக்கில் அமுல்படுத்த வேண்டும்… என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தலைமை தொமுச மாவட்ட செயலாளர் கருப்பையா, மாவட்ட தலைவர் மாரிமுத்து, விற்பனையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் குமரேசன், AIPUC மாவட்டத் தலைவர் அருணாச்சலம் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.