விக்கிரமசிங்கபுரத்தில் வீட்டின் முன் விடப் பட்டிருந்த கார் எரிந்து நாசம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை
car-fired
car-fired

அம்பை: விக்கிரமசிங்கபுரம் கீழ காந்திநகர் வடக்குத்தெரு அம்பலவனபுரத்தை சார்ந்தவர் மரியசெல்வம்.(63). இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி

இவர் நேற்று தனது எட்டு லட்சம் மதிப்புள்ள காரை வீட்டின் வெளியே விட்டிருந்தார் இந்நிலையில் அதிகாலையில் ஏதோ கருகிய வாடை வந்தது. 

இவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த பொழுது தனது கார் தீப்பிடித்து எரிந்ததை கண்டார். உடனடியாக அம்பைத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அம்பை தீயணைப்புத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  தீயை அணைத்தனர். 

இது சம்பந்தமாக மரியசெல்வம் விகே புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.

இது சம்பந்தமாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கார் எவ்வாறு தீப்பிடித்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.