சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் நாளை வரை வெயிலின் தாக்கம் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஈரப்பதம் மிகுந்த காற்று வீசுவது குறைந்து நிலப்பகுதியின் வெப்பம் அதிகரித்தது. இதனால்,வெயிலின் தாக்கம் நாளை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வடக்கு கடலோர பகுதிகளில் நாளை முதல் இடியுடன் கூடிய திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



