இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயது, பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்:
- குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயது, பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக உயர்வு
- அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க ரூ.42 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கீடு
- வனப்பகுதியில் ஏற்படும் தீயை அனைக்க வனச்சரகர்களுக்கு சிறுப்பு பயிற்சி
- அரசுக் கேபிள் டிவி டிஜிட்டல் சேவையினை மேம்படுத்தி HD முறையிலான செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்.
- 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 45.30 கோடி செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 7 கோடி செலவில் புலிகள் காப்பகம்
- உயர்கல்வித்துறையின் கீழ் 683 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்
- கோவையில் 100 கோடி செலவிலும் திருச்சியில் 40 கோடி செலவிலும் தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் கட்டப்படும்
- 30 கோடி செலவில் வனத்துறை தலைமை அலுவலகம் கட்டப்படும்.



