ரஷ்யாவில் உலக கால்பந்து போட்டிக்கு வரும் விருந்தினர் தங்குவதற்கு சகல வசதிகளுடன் கூடிய கேப்சூல் விடுதிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது ரஷ்யா. பெரும் எண்ணிக்கையில் வரும் விருந்தினர்களை வரவேற்பதற்காக கேப்சூல் விடுதி எனும் சின்னஞ்சிறு அறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு பெட்டி போன்று காட்சியளிக்கும் இந்த அறைகளில் மின்விளக்குகள், குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. கால்பந்து ரசிகர்களின் வசதிக்காகவும், அதே நேரம் விலை மலிவாகவும் கிடைக்கும் கேப்சூல் அறைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.



