மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும்.
இந்த ஆண்டு முதல் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு, ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க, மே மாதம் 3ஆம் தேதி முதல், மே மாதம் 30ஆம் தேதிவரை, விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் விண்ணப்பிக்க, 3 நாட்கள் கால அவகாசம் நீட்டித்து, அறிவிப்பு வெளியிட்டது.
எனவே ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள், மே மாதம் 30ஆம் தேதியிலிருந்து, ஜூன் 2ஆம் தேதி என மாற்றபட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வும் தொடங்கும் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.



