காதலியுடன் இருந்த கண்டக்டர்! வாசலில் பொதுமக்கள் கூடியதால் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
SUSIED MAN

45 வயது கள்ளக்காதலியுடன் வீட்டில் தனிமையில் இருந்த 23 வயது கண்டக்டரை பொதுமக்கள் பிடித்தனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் , இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ளது கண்ணம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23) என்பவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்தார். இந்த நிலையில், பள்ளப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த 45 ஷாலினி (45) என்ற பெண்ணுடன் இவரது பேருந்தில் அடிக்கடி பயணம் செய்துள்ளார்.

அப்போது கிருஷ்ணகுமாருக்கு அந்த பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்து வந்துள்ளார் கிருஷ்ணகுமார்.

இது அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஒரு வருடமாக இந்த கள்ளக் காதல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை கள்ளக்காதலி ஷாலினி வீட்டிற்கு சென்றுள்ளார் கிருஷ்ணகுமார்.

இதைப் பார்த்த ஒருவர் ஷாலினியின் வீட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு அந்த பகுதி மக்களை கூட்டிவிட்டார். வீட்டின் முன்பு பொதுமக்கள் கூடிவிட்டதால் கள்ளக்காதலி ஷாலினி வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடிவிட்டார்.

இருவரையும் வீட்டை விட்டு வெளியே வருமாறு பொதுமக்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். கள்ளக்காதலி எஸ்கேப்பான நிலையில் வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணகுமார், வெளியில் சென்றால் அவமானம் என்று கருதி, அங்கே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படாததால் பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கிருஷ்ணகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடி கள்ளக்காதலி ஷாலினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலி வீட்டில் இருந்தபோது பொதுமக்கள் வீட்டின் வாயில் கதவை பூட்டி தனிமனித உரிமையில் குறுக்கிட்டதால் ஏற்பட்ட அவமானத்தால் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.