07-02-2023 12:17 PM
More
  Homeஅடடே... அப்படியா?அடையாள ஆவணங்களுக்கு... என்ன செய்யலாம்?! அவசியம் படியுங்க இதை...!

  To Read in other Indian Languages…

  அடையாள ஆவணங்களுக்கு… என்ன செய்யலாம்?! அவசியம் படியுங்க இதை…!

  aadhar - Dhinasari Tamil

  யார், யாருக்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

  தப்பில்லை; நமக்கான ஆவணங்களை நாம் தயாராக வைத்திருப்பதோ, இல்லையேல் அவற்றை உருவாக்கிக் கொள்வதோ தப்பான காரியமில்லை. இன்னும், அது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய வேலைதான்.

  எனவே, முதல் வேலையாக ஒவ்வொரு வீட்டிலும் பொறுப்பாளியாக இருப்போர் கீழ்க்காணும் ஆவணங்கள் இருக்கின்றனவா என சோதியுங்கள். இல்லையேல், அதனைத் தயாராக்க முனைப்பு காட்டுங்கள். அவசரம் தேவையில்லை; பதட்டம் தேவையில்லை. அதே சமயம், ரொம்ப நிதானமும் அசால்ட்டும் வேண்டாம்.

  2004 டிசம்பருக்குப் பின்னர் பிறந்தவர்கள் எனில்⬇

  1. பிறப்புச் சான்றிதழ்(கட்டாயம்)
  2. தாய் மற்றும் தந்தைக்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்(கட்டாயம்)

  1987 ஜூலைக்கும் 2004 டிசம்பருக்கும் இடையில் பிறந்தவர் எனில்⬇

  1. பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்(கட்டாயம்)
  2. தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் யாராவது ஒருவரின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்(கட்டாயம்)

  1987 ஜூலைக்கு முன்னர் பிறந்தவர் எனில்⬇

  1. பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ்(கட்டாயம்)

  இதில் 1987 க்கு முன்னர் பிறந்தவர்களுக்கான ஆவணங்களில்தான் பிரச்சனை வரும். இவர்களுடையதைச் சரியாக காட்டினால்தான் இவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கான குடியுரிமையையும் உறுதிபடுத்த முடியும். இந்த கேட்டகரியில் வருவோருக்கு,

  01 June30 aadhar card pan card - Dhinasari Tamil

  வங்கி கணக்கு, நில ஆதாரம், வாடகை பத்திரம், ஓட்டர் ஐடி, ஓட்டுனர் உரிமம் எனப் பல ஆவணங்களில் ஏதேனுமொன்றைக் காட்டி நிரூபிக்கலாம். இல்லையேல், சமுதாயத் தலைமைகள் தரும் உறுதிபடுத்துதல் பத்திரங்களையும் பயன்படுத்தலாம் என சமீபத்தில் அறிவித்திருந்தாலும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நாம் பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் என்ற இரண்டை மட்டும் முக்கியமானதாக வைத்து செக் செய்யலாம்.

  எனவே, ஒவ்வொருவரும் முதலில் தத்தம் வீட்டிலுள்ளோரில் யார் யாருக்கெல்லாம் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை உள்ளன என்பதை செக் செய்யுங்கள். இரண்டும் இருப்போருக்குக் கவலையில்லை.

  பிறப்புச் சான்றிதழ் இருந்து பாஸ்போர்ட் இல்லையேல், பிறப்புச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழுக்கான ரேசன் கார்ட் முதலான ஏதேனுமொன்றுடன் உடனே பாஸ்போர்டுக்கு விண்ணப்பியுங்கள்.

  பிறப்புச் சான்றிதழ் இல்லையேல், மருத்துவமனையில் பிறந்தோராக இருந்தால், அம்மருத்துவமனையில் செக் செய்து விவரம் பெற்று அதனைக் கொண்டு அவரவர் பஞ்சாயத்தில் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்.

  வீட்டில் பிறந்தோராக இருந்தால், மருத்துவமனையில் பிறக்கவில்லை என்பதற்கான நோட்டரி அட்டஸ்டுடன் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதற்கான சான்று வாங்கி, தாய் தந்தையரின் பெயர் சான்றுக்கான ரேசன் கார்ட் முதலானவற்றுடன் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறமுடியும். அல்லது நீதிமன்றம் மூலமும் பெற முடியும். இது, 1969 க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு. அதற்கு முன் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை. பாஸ்போர்ட் மட்டும் வைத்திருந்தாலே போதுமானது.

  நிதானமாக வீட்டில் யார், யாருக்கெல்லாம் பிறப்பு சான்றிதழ் உள்ளது, அவர்கள் பிறந்த ஆண்டு எது, பாஸ்போர்ட் உள்ளதா என்பதைச் சோதித்து தேவையானதைத் தயாராக்க முனையுங்கள். இது அமைதியாக, பதட்டமில்லாமல் சைலண்டாக செய்ய வேண்டிய வேலை..

  • எம்.சரவணக்குமார்@எஸ்.கே
   மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து ABGP)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  five + nine =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,055FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,459FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

  இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  Latest News : Read Now...