அரசு கேபிள் டிவிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

சற்றுமுன்
IMG 20170927 WA0010 - 2026
unnamed - 2026

தமிழகத்தில், அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் வழியாக, 70 லட்சம்
வாடிக்கையாளர்கள், ‘அனலாக்’ என்ற, சாதாரண தொழில் நுட்பத்தில், ‘டிவி’
நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும், ‘டிஜிட்டல்’ ஒளிபரப்பு கட்டாயமாக்கப்பட்டு
உள்ளது. அதனால், ‘டிஜிட்டல்’ உரிமம் கோரி, தமிழக .அரசு கேபிள், ‘டிவி’
நிறுவனம் விண்ணப்பித்தது

மே மாதம் அனுமதிவழங்கிய, ‘டிராய்’ என்ற, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை
ஆணையம், ‘மூன்று மாதங்களுக்குள், அனைவருக்கும், ‘செட் – டாப் பாக்ஸ்’கள் தர
வேண்டும்; அனலாக் ஒளிபரப்பு இருக்கக்கூடாது. மீறினால், டிஜிட்டல் உரிமம் ரத்து
செய்யப்படும்’ என, எச்சரித்தது.’டிராய்’ கொடுத்த கெடு முடிந்து ஒரு மாதமாகி
விட்டது.

அதனால், அரசு கேபிள் இயக்குனருக்கு, செப்., 25ல்,’டிராய்’ கடிதம் ஒன்றை
அனுப்பி உள்ளது. அதில், ‘உங்களுக்கு அளித்த மூன்று மாத கெடு முடிந்து விட்டது.
‘

எனவே ‘அனலாக் ஒளிபரப்பை நிறுத்தி விட்டோம் என, 10 நாட்களுக்குள் உத்தரவாதம் தர
வேண்டும்; இல்லையெனில், டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்படும்’ என, தமிழக
அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

1 thought on “அரசு கேபிள் டிவிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.