
கர்ப்பிணியை தாக்கியதாக தி.மு.க பிரமுகர் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான அன்னலெட்சுமி என்பவரை தி.மு.க வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜனின் மகன் ஜெயபாலன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை தடுக்க வந்த பெரியதுரை என்பவரை தாக்கிய ஜெயபாலன் மற்றொருவரான செந்தூர்பாண்டி என்பவரின் வீட்டையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காயமடைந்த கர்பிணி பெண் அன்னலெட்சுமி ஏரல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயபாலன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து தி.மு.க அமைப்பாளர் சுந்தர்ராஜன் மகன் ஜெயபாலன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தி.மு.க’வில் மாவட்ட மற்றும் நகர அளவிலான நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் இயங்குவதும். அவர்களின் வாரிசுகள் மைனர்களாக வலம் வருவதும் இதனால் பொதுமக்கள் படும் துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும்
முன்பெல்லாம் மாதம் ஒன்று என அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த தி.மு.க’வின் அராஜக ரவுடிசம் இன்று தினமும் ஒன்று நடைபெற்று செய்திகளில் வருவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது எனவும் தமிழக மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.