சென்னையில் பேச்சுவார்த்தை: கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் கைது

Published:

சென்னை: சென்னையில் வரும் மார்ச் 24, 25ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 29 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி – கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்து, அதிலிருந்த 29 மீனவர்களைக் கைது செய்தனர். பின்னர் இரவு 8.30க்கு மீனவர்கள் அனைவரும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இத்தகவலை எமிரிட்டுக்கு அனுப்பியதாகக் கூறினார். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக சென்னையில் மார்ச் 24,25ஆம் தேதிகளில் இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img