உனக்கு கும்கி தான் சரி.. சிகிச்சை செய்ய வந்த மருத்துவ குழுவை துரத்திய யானை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
elephant-1
elephant-1

சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினரை யானை துரத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாக்கமூலா பகுதியில் இருக்கும் ஒரு காபி தோட்டத்தில் நின்று கொண்டிருந்த அந்த காட்டு யானையை வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து கோவை கால்நடை மருத்துவர் சுகுமாரன், ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதன் அருகில் சென்ற போது காட்டுயானை கோபத்துடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினரை துரத்தியுள்ளது.

இதனால் வனத்துறையினரின் முயற்சி கைவிடப்பட்டது. எனவே முதுமலையில் இருந்து கும்கிகளை வரவழைத்து அதன் உதவியோடு காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.