Homeஉள்ளூர் செய்திகள்காவல் துறை ‘இஸ்லாமிய வணிகர்களின் வர்த்தக ஏஜென்ட்’டா? கேள்வி எழுப்பும் செங்கோட்டை ஹிந்துக்கள்!

காவல் துறை ‘இஸ்லாமிய வணிகர்களின் வர்த்தக ஏஜென்ட்’டா? கேள்வி எழுப்பும் செங்கோட்டை ஹிந்துக்கள்!

diwali poster - Dhinasari Tamil
செங்கோட்டை போலீஸாரால் நகர இந்துமுன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் படக் காரணமாக அமைந்த போஸ்டர்…

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அண்மையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இஸ்லாமிய இயக்கங்களின் தூண்டுதலில் சிலர் விநாயகர் மீது கல்லெறிந்து கலவரத்துக்கு வித்திட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள், ஊரை மத ரீதியாகப் பிளவுபடுத்தின.

பயங்கரவாத இஸ்லாமிய இயக்கங்களின் தூண்டுதலால் ஊருக்குள் ஏற்பட்ட மத மோதல்களைக் கண்டு, ஊரில் நெடுங்காலம் வசித்து வரும் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். ஊருக்குள் பிரிவினை எண்ணம் எழாமல் இதுவரை ஒன்றாகப் பழகியவர்கள், திடீரென இவ்வாறு மத ரீதியாகப் பிளவு கண்டது கண்டு இரு தரப்பு பெரியவர்களுமே அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சமரசக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன!

குறிப்பாக, செங்கோட்டை ஊரில் இஸ்லாமியர்களுடன் எந்தவித வர்த்தக உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அனைத்து இந்து சமுதாயக் கூட்டமைப்பு சார்பில் போடப் பட்ட கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவு, தேசிய அளவில் எதிரொலித்தது. இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் செங்கோட்டைக்கு வந்தார். ஊருக்குள் இரு பிரிவினரையும் சமாதானம் செய்வதாக சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அப்போதைய நடவடிக்கைகளின் நோக்கம் நல்ல விதமாகவே அமைந்தாலும், ஊரில் இந்துக்களின் எண்ணத்தை அறிந்து சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார்கள் என்றே அப்போது கூறப்பட்டது.

தாசில்தார் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இரு சமரசக் கூட்டங்களையும், ஓர் அமைதிப் பேரணியையும் நடத்தினர். இந்தக் கூட்டங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே அதிகம் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் கைகளில் நகர வர்த்தக சங்க தலைமை இருப்பதாலும், திமுக., அரசியல் சார்பு இருப்பதாலும் கட்சியினரும் குறிப்பிட்ட சிலருமே இந்த அமைதி ஊர்வலத்திலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். இதனை உணர்ந்து கொண்டு பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியாமல், ஏதோ ஒப்புக்கு கூட்டத்தை நடத்தியதாகவே அது பார்க்கப் பட்டது.

sengottai peace walk4 - Dhinasari Tamil

இந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம்சாட்டி கைது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அவர்களில் இஸ்லாமியர் தரப்பில் இருந்து வெளியூர் நபர்களே அதிகம் கைதாகி உடனே ஜாமீனில் வெளிவந்தனர். ஆனால் உள்ளூர் இந்து இளைஞர்கள், வியாபாரிகள் பல்வேறு வழக்குகளில் சிக்கிக் கொண்டு, ஜாமீனில் வெளிவர கால தாமதம் ஆகி, மிகவும் சிரமங்களைச் சந்தித்தனர். காவல் துறையும் இந்து இளைஞர்களைத் தேடித் தேடி கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டு, பலரையும் நிம்மதி இல்லாமல் ஆக்கியது.

இந்த நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கைகள் இந்துக்களிடையே அதிருப்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தின. இதனால் வெளிப்படையாகவே, காவல் துறையினர் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும், இந்துக்களின் பாராமுகத்தால் முடங்கிப் போன இஸ்லாமியர்களின் வர்த்தகம் மீண்டும் நடைபெற, ஏஜெண்டுகள் போல் காவல்துறையினர் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

taluk office sengottai - Dhinasari Tamil

கலவரம் நடந்த மறுநாள், மாவட்ட ஆட்சியர் நடத்திய அமைதிக் கூட்டத்தில் பகிரங்கமாகவே இஸ்லாமியர் தரப்பு, இந்த வர்த்தக புறக்கணிப்பு என்ற விவாதத்தை ஒரு புகாராக முன்வைத்தது. அதற்கு தாம் ஒன்றும் இதில் செய்ய இயலாது என்று கூறிவிட்டு ஒதுங்கினார் மாவட்ட ஆட்சியர். ஆனால் தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்களும் நடவடிக்கைகளும் இஸ்லாமியரின் வியாபாரத்துக்கு உதவும் கோரிக்கையை செயல்படுத்த காவல்துறையினர் முனைந்துவிட்டதையே காட்டியதாக நகர இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, தென்காசியில் நாணயம் சூப்பர் மார்க்கெட் திறக்கப் பட்டதும், அதற்கு இஸ்லாமியர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் ஓர் ஒலிப்பதிவு வாட்ஸ்அப்களில் வைரலாகப் பரவியது. அது குறித்து எதுவும் கண்டு கொள்ளாத காவல்துறை, இன்று மேற்கொண்ட ஒரு கைது நடவடிக்கை, இஸ்லாமிய வர்த்தக ஏஜெண்டாக காவல் துறை செயல்படுகிறதோ என்ற இந்துக்களின் சந்தேகத்தை உறுதிப் படுத்துவதாக அமைந்து விட்டதாகவே கூறப் படுகிறது.

இது குறித்து இந்து முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறியபோது, தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், இந்துக்களின் கடைகளிலேயே பொருள்களை வாங்குங்கள், நாம் கொடுக்கும் ஒரு பைசாவும் ஒரு இந்துவுக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்து நெல்லை கோட்ட இந்து முன்னணி சார்பில் எல்லா இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டன.

குறிப்பாக, செங்கோட்டையில் நடைபெற்ற முதல்நாள் இந்து சமுதாயக் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவு போல், இஸ்லாமியர் கடைகளில் பொருள்கள் வாங்காதீர் என்று எங்குமே சொல்லாமல், இந்து கடைகளில் பொருள்களை வாங்குங்கள் என்று போஸ்டரில் குறிப்பிடப் பட்டது.

இந்தக் கருத்தை, இந்து முன்னணி அமைப்பு நெடுங்காலமாக கூட்டங்களில் சொல்லி வருகிறது. காரணம் இது வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்புடையது என்பதால்தான்! இஸ்லாமியர்களுக்கு முதலீடு எங்கிருந்தெல்லாமோ வருகிறது; ஆனால் பாரம்பரியமாக எண்ணெய் கடை, மளிகைக் கடை, சிறு கடைகள் என வைத்து தங்களின் வாழ்க்கைக்கான வாழ்வாதாரமாக இந்த வணிகங்களை வைத்திருப்பவர்கள், கடும் சவாலைச் சந்திக்க நேர்கிறது. பெரிய ஏஜென்ஸிகளை எடுத்துக் கொண்டு, வியாபாரத்தையே மத ரீதியாக அணுகும் இஸ்லாமிய பெரு வர்த்தகர்களால், இந்து வியாபாரிகள் நொடித்துப் போகிறார்கள். எனவே இந்துக்களைக் காக்க, இந்துக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த இந்தக் கொள்கையை இந்து முன்னணி களத்தில் முன்வைத்தது என்றார் அந்த வழக்கறிஞர்.

இத்தகைய பின்னணியில், செங்கோட்டை நகரில் இன்று காலை, இந்த வால்போஸ்டர் ஒட்டியதற்காக, எவருமே புகார் கொடுக்காத நிலையில் செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் பட்டிருக்கிறார். இதற்கு, செங்கோட்டை காவல் நிலையத்தின் வர்த்தக ஏஜெண்ட் மனோபாவம்தான் காரணம் என்றும், முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, ரிமாண்ட் செய்யப் பட்டுள்ளார் என்றும் இந்து முன்னணியினர் கூறுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து முன்னணி வழக்கறிஞர் குற்றாலநாதன், இதே சட்ட வேகத்தை விநாயகர் ஊர்வலத்தில் கல் எறிந்த அன்று இரவே ஏன் முஸ்லீம் பயங்கரவாதிகளிடம் காட்டவில்லை ? அன்று இரவே கைது செய்திருந்தால் மறுநாள் ஊர்வலத்தில் மீண்டும் கல்வீச்சு கலவரம் என வந்திருக்காதே!

பாரத பிரதமரையும், இந்து இயக்கங்களையும் அவதூறாக அவ்வப்போது சில லெட்டர் பேட், அனாதை இயக்கங்களும் முஸ்லீம் பயங்கரவாத இயக்கங்களும் போஸ்டர் ஒட்டிய போது பூப்பறித்துக் கொண்டிருந்தார்களோ? என்று கேள்வி எழுப்பினார்.

ஏற்கெனவே அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் டல் என்றே முணுமுணுக்கின்றனர். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்திக்குப் பின்னர்தான் வரிசையாக பல பண்டிகைகளும் வரும். அந்த வகையில் பிள்ளையார் சுழி போல் அமைவது சதுர்த்தி விழாதான். விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, வரும் வருடம் நல்ல முறையில் வியாபாரம் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அடுத்தடுத்த விழாக்களை நகர்த்துவோம். பண்டிகைகள் மூலம் எங்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும். ஆனால் இப்போது தீபாவளி வரை வந்தாயிற்று. இருப்பினும், கலவரத்துக்குப் பின்னர் வியாபாரம் இரு தரப்புக்குமே வெகுவாகப் பாதித்திருக்கிறது. இந்து வியாபாரிகளும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இடையில் ஆன்லைன் வர்த்தகம் வேறு சிறு வணிகர்களை பெரிதும் பாதித்திருக்கிறது. இத்தகைய சூழலில் போலீஸார் மேலும் மேலும் பிரச்னையைத் தூண்டும் விதமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள் இங்குள்ளவர்கள்!

போஸ்டர் ஒட்டியதற்காக இந்து முன்னணி தலைவரை கைது செய்த போலீஸாரின் இந்தச் செயல், செங்கோட்டை நகருக்குள் மீண்டும் பிரச்னையை தூண்டும் விதத்தில் அமைந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
377FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,876FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...