பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பாஜக., மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக மூத்த தலைவருமான இல.கணேசன்.
பின்னர் அவர் கூறியபோது, பிரிவினை வாதம் நாத்திக வாதம் இடையில் இருந்த சில வாதங்கள்.. தேசியத்தையும் தெய்வீகத்தையும் போற்றி வளர்த்தவர் தேவர் பெருமகனார்… தமிழ்நாட்டின் தொன்மையான அடையாளமான தேசியமும் தெய்வீகமும் மீண்டும் தழைக்க வேண்டுமானால், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையையும் வாக்கையும் அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும். தேவர் பெருமானின் கொள்கையை நூற்றுக்கு நூறு நான் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்கிறது… என்றார் இல.கணேசன்!
அவருடன் வந்திருந்த பாஜக., பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைத்தால் அரசு மேலும் சிறப்படையும் என்றார்.