நெரிசல் சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

Published:

20171002 194035 - 2026

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பெண்ணின் கழுத்தில் உள்ள நகையை மர்ம நபர் ஒருவர்
பறித்து செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சைதாப்பேட்டை மசூதி அருகே சசிகலா (27) என்ற பெண் நடந்து
சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் வந்த இருவர் நோட்டமிட்டுள்ளனர்.
பின் அப்பெண்ணை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவரும், பெண்ணிடமிருந்து
கழுத்திலிருந்த செயினை அறுத்துச் சென்றனர்.

சசிகலாவின் கழுத்திலிருந்த 8 சவரன் தங்க நகையை பைக்கின் பின்புறம்
அமர்ந்திருந்த வாலிபர் அறுத்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்
அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறித்துச் செல்லப்பட்ட தங்க நகையின் மதிப்பு 8 சவரன் ஆகும்

Related articles

Recent articles

spot_img