நெல்லை : லாரி – வேன் மோதல் 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்

Published:

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த உமன்தரகன் யூனிஸ்.

இவர் மெக்கா, உம்ரா புனித பயணத்திற்காக கடையநல்லூரில் இருந்து உறவினர்களுடன் வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அவரை வழி அனுப்பி விட்டு உறவினர்கள் வேனில் கடையநல்லூர்வந்து கொண்டிருந்தனர் இன்று அதிகாலை சுமார் 5.20 மணியளவில் கடையநல்லூர் மங்களாபுரம் பகுதியில் வரும் போது எதிரே வந்த சிமெண்ட் லாரி எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் நெடுவயல் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார் தகவலறிந்த கடையநல்லூர் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா;.

வேனில் பயணம் செய்த அப்துல் ரஹீம் மகன் முகமது ராஷீத் (8) மற்றும் காஜா மைதீன் மனைவி சைபுன்னிஸா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் மேலும் வேனில் பயணித்த 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் மங்களாபுரம் மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் அதிகளவில் ஆபத்தான வளைவுகள் உள்ளது.

குற்றாலம் சீசன் மற்றும் ஐயப்பன் கோவில் சீசன், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்பவர்கள் என அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர் . மேலும் இந்த சாலையில் தொடர் விபத்துகள் ஏற்படுவதால் சாலைகளின் வளைவுகளில் தடுப்பு அமைக்கவும் மற்றும் சாலையில் வேகத்தடை அமைக்கவும் இப்பகுதி மக்கள் பலமுறை கோரிpக்கை விடுத்துள்ளனர் .

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இன்னும் சில நாட்களில் ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆரம்பமாக இருப்பதால் விரைவில் இப்பகுதிகளில் தடுப்பு மற்றும் வேகத்தடை அமைத்து உயிரிழப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

knlr van - 2026

Related articles

Recent articles

spot_img