புரட்டாசி 3வது சனிக்கிழமை; கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
devakottai-perumal
devakottai-perumal

தேவகோட்டை நகர் வெள்ளையன் ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்கார கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்

மதுரை சோழவந்தான் பகுதிகளில் புரட்டாசி 3-வது வாரம் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

சோழவந்தான் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது புரட்டாசி 3வது சனி வாரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது முரளீதரன் அர்ச்சகர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்

இங்கே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ரகுராமன் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார் இங்கே பெருமாளை நோக்கி இருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது

ஸ்ரீ பாலாஜி பட்டர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆலய பணியாளர்கள் வெங்கடேசன் கிருஷ்ணன் நாகராஜன் மணி ஆகியோர் செய்திருந்தனர்

மதுரை விருதுநகர் தேனி உள்பட அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து பெருமாளை குருபகவானை தரிசித்து அருள் பெற்றனர்

சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜனகன் நாராயணனுக்கு இருபத்தொரு அபிஷேகங்கள் நடந்தது ரகு ராமர் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சத்யநாராயணன் ஆலய பணியாளர் பூபதி வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்

  • செய்தி:ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.