ஸ்டாலினுக்கு விவசாயியாக நடிக்கக் கூட தெரியல: செல்லூர் ராஜு நக்கல்!

sellur-raju-1
sellur-raju-1

”திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும், பதவிக்கும் மட்டுமே; ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் மக்களுக்காக தமிழக பிரச்சனைக்களுக்காக செல்கின்றனர்” என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ…!!

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியில் நடைபெற்றது இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்,

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர், மதுரையில் கிழக்கு மேற்கு மத்திய,தெற்கு உள்ளிட்ட நான்கு தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும்,அதிமுகவுக்கு புதுமுகங்கள் இளைஞர்கள் தானாகவே வந்து கொண்டிருக்கின்றனர்,எந்த இயக்கத்திலும் இது போன்று கிடையாது!

ஒரு சிலர் எது ஆளுங்கட்சியாக இருக்கிறதோ அந்தக்கட்சியில் சேர்ந்துகொள்வார்கள், ஆனால் கொள்கைக்காக இருப்பவர்கள் அதிமுகவினர். அதிமுகவை சிலபேர் சாதாரண கட்சியாக நினைக்கின்றனர்,

சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கலைஞர், ஆனால் மக்கள் எம்.ஜி.ஆர் பக்கம் நின்றார்கள், மானம் ரோஷம் எப்போதுமே திமுகவுக்கு இருந்தது கிடையாது, பதவிக்காக எதையும் இழக்கக்கூடியவர்கள் திமுகவினர், எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது, பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது,

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அதிமுகவில்,ஆட்சியில் பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஒடிய போதும் கட்சியை கட்டிக்காத்தவர்கள் அடிமட்ட தொண்டர்கள்

மதுரையில் ஒரு காலத்தில் அழகருக்கும் மீனாட்சிக்கும், சொக்கருக்கும் இல்லாத செல்வாக்கு அழகிரிக்கு இருந்தது. அவர் மதுரையில் இருந்த போது தான் ஜெயலலிதாவுக்கு 19 மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டது!!

திமுக ஆட்சிக்கு வரும் வரும் எனச் சொல்லி அது அப்படியோ போய்விட்டது பொங்கலுக்கு திமுக ஆட்சிக்கு வரும் எனக்கூறி காசுக்கு ஆள்பிடித்தார் ஸ்டாலின், திமுகவை போல அதிமுக கம்பெனி அல்ல, ஸ்டாலின் நினைத்தால் தான் பொருளாளர், துணைச்செயலாளர், துணைத்தலைவர் பதவி! ஆனால் அதிமுக உண்மையான ஜனநாயக இயக்கமாக உள்ளது,

ஸ்டாலினுக்கு விவசாயியாகக் கூட நடிக்கத் தெரிய வில்லை, விவசாயிகள் முன்பு சரியாக படிக்கக் கூடத் தெரியவில்லை!

பாரதப் பிரதமரே பாராட்டிய அரசு அதிமுக அரசு, திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும்,பதவிக்கும் மட்டுமே. ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக, தமிழக பிரச்சனைக்களுக்காக சென்றனர்,

திமுக ஊழலுக்காகவே இருக்கும் கட்சி, திமுக தற்போது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறது, கோஷ்டி பூசலை சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக நினைக்கிறது, ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் இருக்கத்தான் செய்யும், திமுகவில் ஜனநாயகம் பேசி விட முடியுமா? ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசி விட முடியுமா?,

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

திமுக ஒரு கம்பெனி அவரை எதிர்த்து யாரும் நிற்க முடியுமா? அவரை எதிர்த்தால் அனைவரும் காலி, திமுக என்பது ஒரு தீயசக்தி அதை வேரோடு மண்ணோடு ஒழிக்க வேண்டும்,

திமுக கட்சியை வளர விட மாட்டோம் ஆட்சியில் அமற விட மாட்டோம், பத்தாண்டுகளில் கட்டப்பஞ்சாயத்து இல்லாத ஆட்சி கொடுத்துள்ளது அதிமுக… என்றார் அமைச்சர் செல்லூர் ராஜு.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories