
காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் டிவி ஷோவான பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் மாடலிங் செய்து வந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, இவர் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்தார். ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியேறிய பின்னர், தர்ஷன் சனம் ஷெட்டியை தவிர்த்தார்.
அவர்களுக்கு ஏற்கெனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்ததாகவும், தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும், கடந்த ஜனவரி மாதமே நடிகை சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்தார். தர்ஷன் தன்னிடம் 15 லட்சம் ருபாய் வரை பணம் வாங்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
எனினும் போலீஸார் இந்தப் புகார் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் சனம் ஷெட்டி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தர்ஷன் குறித்து தாம் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்ஷன் பிக் பாஸ் 3 ஷோவில் போட்டியாளராக இருந்த போது, பிக் பாஸ் வீட்டில் மற்றொரு போட்டியாளரான ஷெரின் உடன் மிக நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப் பட்டது. அதுவே தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவுக்கு காரணம் என்றும், அதற்கு ஷெரின் தான் காரணம் என்றும் கிசுகிசுக்கப் பட்டது.
Source: Vellithirai News



