கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு பேருந்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்

சற்றுமுன்
கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு  புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு கல்லூரிக்கு செல்ல நேரடி  பேருந்து வசதி செய்து தர வேண்டுமென  நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து எம்.பி.யின் முயற்சியின் பேரில்   கீழப்பாவூரில் இருந்து ராணி அண்ணா மகளிர் கல்லூரி வழியாக நெல்லைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்குவதற்காக ஆணையை முதல்வர்   அறிவித்து, நெல்லையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து   கீழப்பாவூரில் நடந்த நிகழ்ச்சியில் பேருந்து சேவையினை   கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. பேருந்தை இயக்கி வைத்து பாவூர்சத்திரம் வரை பயணிகளோடு பயணித்தார் நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.பால்துரை, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, அட்மா சேர்மன்  கணபதி, மாநில பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை, நிர்வாகிகள் மதியழகன், ஜெயராமன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.