வாழ்வுக்கு வழி காட்டுங்கள் குமுறும் பொதுசேவை மைய உரிமையாளர்கள்

விருதுநகர் மாவட்ட  மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின்    மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்  அவர்கள் அளித்த கோரிக்கைமனுவில்  வைவா  (விஐவிடபிள்யூ) என்கிற அமைப்பு விருதுநகர் மாவட்ட அளவில் உள் ள மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பின் உறுபினர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சேவைகளையும் பொதுமக்களுக்கு இன்றளவும் குறைந்த கட்டணத்துடன் சேவை மனதுடன் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டில் தமிழக அரசின் இ-சேவை திட்டமானது அனைத்து பொது சேவை மையங்களுக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும் என்று வாக்களிப்பட்டு அதன் அடப்படையில் விருதுநகர் மாவட்ட அளவில் சுமார் 39 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக வழங்கப்பட்து.ஆனால் அதன் பின்னர் நிறுத்தப்ட்டது. காரணம் கேட்டதற்கு முறையான தகவலை யாரும் இன்று வரை  தரவில்லை. இதுறித்து மாவட்ட இ.டி.எம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் முறையிட்டும் இன்று வரை அதற்கு தகுந்த விளக்கமோக தகவலோ வரவில்லை. ஆனால் சீனியாரிட்டி அடிப்படை இல்லாமல் வேறு வழிமுறைகளில் இச்சேவை பலருக்கு வழங்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதுகுறித்து கேட்டபோதும் அதற்கும் முறையான விளக்கம் தரப்படவில்லை.
மேலும் ஆதார் சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்த யுஐடிஏஐ தற்போது இச்சேவைகளை அரசு கட்டிடத்தில் மட்டுமே வைத்து இயக்க  வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது., இதனால் ஆதார் சேவைகளை நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ள  பொது சேவை மைய உரிமையாளர்கள் அனைவரும் வீதிக்கு  வரும் நிலை ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் இதுநாள் வரை பொதுமக்களுக்கு வார நாட்கள், விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை என்று பாராமலும், தேவைப்பட்டால் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்றும் பொதுமக்களுக்கு ஆதார் சேவைகளை செய்து வந்த பொது சேவை மையங்கள் இன்று மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அன்றாடம் கூலி சேவைக்கு சென்று பிழைப்பு நடத்தும் ஏழை தொழிலாளர்கள் இனி ஆதார் மற்றும் தமிழக அரசின் இ -சேவைகள் பெறுவதற்கு அரசு அலுவகங்கள் மட்டுமே செல்ல வேணடும். இதனால் அவர்களின் வேலை கூலி இழப்பு மட்டுமல்லாமல், அங்கு அலைக்கழிக்கப்படுவதால் பெரும் மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஆளாகிறார்கள்.
இதுகுறித்து வைவா  (விஐவிடபிள்யூஏ )மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பொதுமக்களின் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் இ-சேவை ஐடி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு ஆவண செய்யும் பட்சத்தில் மாநில அரசின் விதிமுறைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் தவிர இதர கட்டணமோ, அதிக கட்டணமோ வசூலிக்கமாட்டோம் என்றும், பொது மக்களுக்கு முறையான தகவல் மற்றும் சேவைகளை செய்வோம் என மனுவில் தெரிவித்துள்ளனர் 

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories